Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோத்தா கூட்டுறவு கழகம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது!

கோத்தா கூட்டுறவு கழகம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக அந்த கூட்டுறவு கழகத்தின் செயலாளர் உத்தமன் வேலு கூறினார்.
கடந்த 1975 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட கோத்தா கூட்டுறவு கழகத்தின் சரியான இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
நேற்று கோத்தா கூட்டுறவு கழகத்தின் 43-வது ஆண்டு பேராளர்கள் கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
தனது உறுப்பினர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு இந்த கூட்டுறவு கழகம் சிறப்பாக இயங்கி வருவதாக அவர் சொன்னார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டுறவு கழகத்தின் செயலாளர் பதவியை தாம் வகித்ததை தொடர்ந்து, இந்தக் கூட்டுறவு கழகத்தின் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் தனது உறுப்பினர்களுக்கு 6 விழுக்காடு லாப இவு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
குறைந்தபட்சம் 500 வெள்ளி முதலீடு செய்துள்ள உறுப்பினர்களுக்கு இந்த லாப இவு வழங்கப்பட்டுள்ளது.


ஒரு லட்சம் வெள்ளி முதலீட்டை செய்துள்ள உறுப்பினர்களுக்கு வெள்ளி 6,000 லாப இவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தக் கூட்டுறவு கழகம் லாபகரமாக செயல்பட்டு வருகிறது.
வங்கியில் போதுமான அளவு வைப்பு தொகையும் உள்ளன. ஆகையால் தான் இந்த கூட்டுறவு கழகம் கடன் எதுவும் இன்றி இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
விரைவில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இவை அனைத்தும் முதலீடு நோக்கத்தில் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தனது உறுப்பினர்களின் சமூக நலன், வாழ்வாதாரம் போன்றவற்றிற்கு இந்த கூட்டுறவு கழகம் முன்னுரிமை வழங்கி வருகிறது.


இதனிடையே இந்த கூட்டுறவு கழகத்திற்கு வற்றாத ஆதரவை வழங்கி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தாம் நன்றி கூறுவதாக கோத்தா கூட்டுறவு கழகத்தின் தலைவர் பெருமாள் சொக்கலிங்கம் தமது உரையில் கூறினார்.
இந்த கூட்டுறவு கழகத்தின் உறுப்பினர்கள் தங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கி வர வேண்டும் என கொண்டார் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே கோத்தா கூட்டுறவு கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அரசாங்கத்தை பிரதிநிதித்து வருகை புரிந்த சபாக் பெர்னாம் கோலா சிலாங்கூர் துணை இயக்குனர் முகமட் அனாஸ் கூறினார்.
கோத்தா கூட்டுறவு கழகத்தின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் தங்களால் இயன்ற ஆதரவை வழங்க முடியும் என அவர் உறுதியளித்தார்.
இந்த கூட்டுறவு கழகம் தங்களது உறுப்பினர்களின் தேவைகளை நிறைவு செய்து வருவது மகிழ்ச்சியை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற இந்த கூட்டுறவு கழகத்தின் 43-வது ஆண்டு பேராளர்கள் பொதுக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டுறவு கழகத்தின் பல உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.


இந்தக் கூட்டுறவு கழகத்தின் எதிர்கால திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் இவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஆண்டு பேராளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிஷ்ட குலுக்கல் வெற்றி பெற்று வருவதற்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி மற்றும் நண்பகல் உணவு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற உதவி வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் உத்தமன் வேலு நன்றி கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular