
தொடர்ந்து 16 ஆண்டாக உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக தேர்வு பெற்றதைத் தொடர்ந்து, 16 நாட்களுக்கு மிக மலிவான கட்டணங்கள் மற்றும் பொன்னான நேர விற்பனையை ஏர் ஆசியா தொடங்கியது.
மேலும் இந்த 16 ஆவது ஆண்டாக இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு பொன்னிற விமானத்தை ஏர் ஆசியா அறிமுகப்படுத்தியது.
நேற்று கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலையத்தில் இந்த பொன்னிற விமானத்தை வழி அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
சிவப்பு மற்றும் வெள்ளை நேரத்துடன் காலம் காலமாக ஏர் ஆசியா வானில் வலம் வந்தது கொண்டிருந்தது. இந்த பொன்னிற விமானம் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து 16 ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனம் ஆக தேர்வு பெற்றது நினைவு கூறும் வகையில், இந்த 16 நாட்களுக்கான மிக மலிவு கட்டணங்கள் மற்றும் பொன்னான நேர விற்பனைப் பிரச்சாரத்தை நேற்று ஏர் ஆசியா தொடங்கியது.
பொன்னான நேர விற்பனை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பொன்னான நேரத்தில் பயணிகள் மிக மலிவு கட்டண டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
ஜொகூர் பாரு, கோத்தா கினபாலு,டா லாட்,கிராபி, ஜெய்ப்பூர் உட்பட பல நகர்களுக்கு இந்த மிக மலிவு கட்டணத்தில் பயணிகள் சிறகடிக்கலாம்.
2 ஜூலை 2025 முதல் 31 மார்ச் 2026 வரை பயணிக்க இன்று முதல் 3 ஜூலை 2025-க்குள் இந்த மலிவு கட்டண டிக்கெட்டுகளை பயணிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம்.

Air Asia MOVE அல்லது airasia.com செயலி வழி பயணிகள் டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.


