
விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) அமலாக்கத்தை அரசாங்கம் மீண்டும் கொண்டு வரக்கூடாது என பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர் நா. பாலசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
எஸ்எஸ்டி மீண்டும் அமலாக்கம் செய்யப்பட்டால் அது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக் காட்டினார்.
அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படலாம் என அரசாங்கம் கோடிக் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வரி விதிக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என அவர் சொன்னார்.
பல்வேறு பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்போது மக்கள் பெரும் சுமையை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தாலும் பொருட்களின் வெளியேற்றும் இன்னும் குறையவில்லை என்றார் அவர்.
நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருவதாக அரசாங்கம் கூறி வந்தாலும், பண வீக்கத்தின் நிலையில் மாற்றம் ஏதுமில்லை என அவர் சொன்னார்.
எஸ்எஸ்டி அமலாக்கத்தால் பி40 தரப்பினர் மட்டுமின்றி எம்40 தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் ஏன் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க நிர்வாகத்தில் ஊழல்கள் குறைய வேண்டும். மேலும் பயனற்ற அரசியல் நியமனங்கள் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இது போன்ற பயனற்ற கொள்கைகளை நிராகரிப்பதில் பாஸ் ஆதரவு பேரவை இன மற்றும் மத பேதமின்றி மக்களுடன் துணை நிற்கும் என அவர் குறிப்பிட்டார்.


