
இந்தோனேசியாவின் பாலேம்பாங் மற்றும் செமாராங் நகர்களுக்கு உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா சிறகடிக்கிறது.
இவ்விரு புதிய நகர்களுக்கான விமான சேவைகளின் மூலம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கிடையே வாரத்திற்கு 188 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொள்கிறது.
இந்த கூடுதல் விமான சேவைகளைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் ஜகார்த்தா, யோக்யாகர்த்தா, பான்டா ஆச்சே, மாக்காசார், பாடாங், பெக்கான் பாரு, பாலிக்பாப்பான், லாபுவான் பாஜொ, லோம்பொக் உட்பட 15 நகர்களுக்கு ஏர் ஆசியா விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் பினாங்கிலிருந்து ஜாக்கார்த்தா மற்றும் மேடான் ஆகிய நகர்களுக்கு ஏர் ஆசியா சிறகடிக்கிறது.

2025 ஆம் ஆண்டில் 16 மில்லியன் அனைத்துலக சுற்றுப்பயணிகளை தருவிக்க இந்தோனேசியா இலக்கை கொண்டிருக்கும் வேளையில் இந்த புதிய விமான சேவைகளை ஏர் ஆசியா திட்டமிட்டுள்ளது.
பாலேம்பாங்கில் சுல்தான் மாமூட் பாடாருடின் 11 விமான நிலையம் மற்றும் ஜென்ட்ரல் அமாட் யானி விமான நிலையம் அனைத்துலக விமான சேவைகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த புதிய விமான சேவைகளை ஏர் ஆசியா தொடங்குகிறது.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரம் நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கிடையே சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த இவ்விரு புதிய விமான சேவைகள் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனிடையே இந்தோனேசியாவில் மேலும் பல நகர்களுக்கு விஸ்திரிக்க இந்த தொடக்கம் ஒரு எடுத்துக்காட்டு என ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
மீண்டும் பாலேம்பாங் மற்றும் செமாராங் நகர்களுக்கு திரும்புவதில் தாங்கள் பெருமை கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த துடிப்பான நகர்களுக்கு புதிய விமான சேவைகளின் மூலம் இந்நகர்களுக்கான அனைத்துலக சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் என அவர் சொன்னார்.
மேலும் இந்த புதிய விமான சேவைகள் இந்நகர்களின் சுற்றுலா மற்றும் வர்த்தக துறைகள் வழுபடும் என அவர் சொன்னார்.
தென் சுமாத்திராவின் தலைநகரான பாலேம்பாங் சுமாத்திரா தீவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும்.

ஸ்ரீ விஜயா பேரரசின் ஆட்சியில் மிக செல்வாக்கு மிக்க நகரமாக பாலேம்பாங் திகழ்ந்து வந்தது.
சுமாத்திராவின் மிக நீளமான ஆறான முசி ஆறு இங்கு தான் தொடங்குகிறது.
இந்நகர் வளமான கலாச்சாரம் மற்றும் பல வகையான உணவு வகைகளுக்கு புகழ்பெற்ற நகரமாகும்.
கடந்த 1965 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அம்பேரா பாலம் இந்நகரின் முக்கிய சின்னங்களில் ஒன்றாகும்.
மத்திய ஜாவாவின் தலைநகரான செமாராங் ஜாவானிய மற்றும் சீன கலாச்சாரங்களை கொண்ட ஒரு அழகிய நகரமாகும்.
இங்குள்ள கம்போங் பெலாங்கி மற்றும் கோத்தா லாமா போன்ற இடங்கள் சுற்றுப்பயணிகளை அதிகமாக கவரும்.
கோலாலம்பூரிலிருந்து பாலேம்பாங் நகருக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 159 முதல் தொடங்குகிறது.
கோலாலம்பூரிலிருந்து செமாராங் நகருக்கான அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 199 முதல் தொடங்குகிறது.


