Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜொகூரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்து சமய சொற்பொழிவு நிகழ்வு!

ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்து சமய சொற்பொழிவு நிகழ்வை ஜொகூர் மஇகா ஏற்பாடு செய்து வருகிறது.
மாநில மஇகாவின் சமயப் பிரிவின் வழி ஜொகூர் மாநில இந்து சங்கம், ஜொகூர் மாநில தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றம் மற்றும் ஜொகூர் பாரு மஇகா தொகுதி ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த சமய சொற்பொழிவு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயங்களுக்கு வருகை புரியும் அவசியம், கல்வியின் முக்கியத்துவம், முறையான உடை அணிதல் போன்ற அம்சங்கள் குறித்து இந்த சமய உரைகளில் வலியுறுத்தப்படும் என ஜொகூர் மாநில மஇகா தலைவரும் மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினருமான ரவீன் குமார் கூறினார்.
நம்மிடையே கட்டொழுங்கு மற்றும் நற்பண்புகளை வளர்க்க சமயம் மிக அவசியம் என அவர் சொன்னார்.


இதன் முதல் கட்டமாக மலேசிய ஸ்ரீ ஆதிசங்கர் திருமடத்தின் நிறுவன சுவாமி மகேந்திரா தலைமையில் சமய சொற்பொழிவு நடத்தப்பட்டது.
இந்த முதல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றிய டாக்டர் மோகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரவீன் குமார், ஜொகூர் இந்து சங்க சமய தலைவர் சேகரன் மற்றும் ஜொகூர் மஇகா துணைத் தலைவர் நிலா ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular