
நாட்டில் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றான கேமரன் மலையில் ஏற்பட்டு வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா தேசிய உதவி தலைவர் டத்தோ டி. முருகையா வலியுறுத்தினார்.
இந்த கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த சுற்றுலா மையத்திற்கு சுற்றுப்பயணிகள் வருகை புரிவது தவிர்த்து வருகின்றனர் என்றார் அவர்.
இதன் காரணமாக அங்குள்ள ஹோட்டல் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண மடானி அரசாங்கம் மற்றும் பகாங் மாநில அரசாங்கம் உடனடியாக செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு பொது விடுமுறை காலத்தில் அந்த சுற்றுலா மையத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் நெரிசல் காரணமாகநீண்ட நேரம் வாகனங்களில் சிக்கிக் கொண்டு அவதிப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதுபோன்று சூழ்நிலை சுற்றுப்பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தருவதோடு அவர்களை அதிருப்தி அடை செய்வதாக அவர் சொன்னார்.
இந்த நெரிசல் காரணமாக கேமரன் மலையில் ஹோட்டல் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.ஹோட்டல்களில் அதிகமான முன்பதிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இது சுற்றுலா துறைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண கேமரன் மலைக்கு புதிய மாற்று சாலை திட்டம் ஒன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும்.
மேலும் தற்போது உள்ள சாலைகளை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதே வேளையில் இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா துறையினரின் கருத்துக்களைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கேமரன் மலை மலேசியாவின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். இந்த நெரிசல் பிரச்சனை தொடர்ந்தால் நாட்டின் சுற்றுலாத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என டத்தோ முருகையா கூறினார்.


