Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஏடிஇ நிறுவனம் உலக தர EASA மற்றும் FAA சான்றிதழ்களை பெற்றது!

ஏர் ஆசியாவின் டுடே நிறுவனமான விமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நிறுவனம் ஏடிஇ(ADE) உலக தர ஐரோப்பாவின் EASA மற்றும் அமெரிக்காவின் FAA சான்றிதழ்களை பெற்றது.
வான் போக்குவரத்து துறையில் உலகில் மிகக் கடுமையான பாதுகாப்பு மற்றும் காற்று தகுதி தரத்தை ஏடிஇ பின்பற்றி வருவதை அங்கீகரிக்கும் வகையில் இந்த உலகத் தர சான்றிதழ்கள் கிடைத்துள்ளது.
இதனிடையே EASA மற்றும் FAA-விடமிருந்து ஏடிஇ நிறுவனத்திற்கு கிடைத்துள்ள இந்த தர சான்றிதழ்கள் குறித்து தாம் பாராட்டுவதோடு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
இவ்விரு சான்றிதழ்களும்
உலகில் விமான போக்குவரத்து கழகங்கள் வழங்கும் மிக மதிப்புமிக்க ஒன்று என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த அங்கீகாரம் ஏடிஇ நிறுவனத்திற்கு மட்டுமின்றி மலேசிய விண்வெளி துறைக்கு கிடைத்த மாபெரும் சாதனை என அவர் சுட்டிக் காட்டினார்.
நமது நாடு அனைத்துலக தரத்தை அடைய முடியும் என்பதை இந்த சாதனை காட்டுவதாக அவர் சொன்னார்.
விமான பராமரிப்பில் ஏடிஇ ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.
அனைத்துலக விண்வெளி துறையில் ஏடிஇ தொடர்ந்து வெற்றிகரமாக கால் பதித்து வரும் என்பதில் சந்தேகம் இல்லை என அவர் சொன்னார்.


இதனிடையே இப்ராந்தியத்தில் விமான பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பது துறையில் ஏடிஇ முன்னணி வைத்து வருவதை இந்த சாதனை காட்டுவதாக ஏடிஇ நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மஹேஸ் குமார் கூறினார்.
ஏர் ஆசியாவிற்கு பிரதான பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு நிறுவனமாக இருப்பது ஒரு மட்டுமின்றி, இப்ராந்தியத்தில் இதர விமான நிறுவனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை ஏடிஇ மேற்கொள்ளும் என அவர் சுட்டிக் காட்டினார்.
உலகத் தரம் மற்றும் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதே ஏடிஇ நிறுவனத்தின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த உலகத் தர சான்றிதழ்களின் மூலம் இன்னும் அதிகமான அனைத்து உலகை விமான நிறுவனங்களுக்கு எங்களின் சேவைகளை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘எங்களின் அனைத்து நட்சத்திரங்களின் கட்டொழுங்கு, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பு தான் இந்த சாதனைக்கு முக்கிய காரணம்’ என அவர் பெருமிதம் கொண்டார்.


ஏடிஇ நிறுவனத்தின் இந்த மாபெரும் சாதனை பெருமை அளிப்பதாக கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
மலேசியா மற்றும் ஆசியான் விமான போக்குவரத்து துறைக்கு கிடைத்த வெற்றி இது என அவர் சொன்னார்.
உலக தரத்தில் நமது சாதனையை அடைய முடியும் என்பதை ஏடிஇ நிரூபித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் ஏடிஇ நிறுவப்பட்டது முதல் இப்ராந்தியத்தில் இதர விமான நிறுவனங்களில் நம்பிக்கையை ஏடிஇ பெற்றுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஏடிஇ மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்னாம், இந்தியா, நேப்பால், தாய்லாந்து மற்றும் மியான்மார் ஆகிய 10 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular