Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் இந்திய கலாச்சார கொண்டாட்டம்!

இங்குள்ள சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் இந்திய கலாச்சார கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்தை திரங்கானு மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.
இந்த கொண்டாட்டத்தை இந்த பல்கலைக்கழகத்தின் இந்திய கலை மற்றும் கலாச்சார சங்கம் ஏற்பாடு செய்தது.


நமது இந்திய கலை மற்றும் கலாச்சார மாண்புகள் தொடர்ந்து நீடிப்பதை இந்த கொண்டாட்டம் நினைவுபடுத்துவதாக டாக்டர் பாலச்சந்திரன் தமது உரையில் கூறினார்.
இந்த பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்றார் அவர்.
அதே வேளையில் நமது இந்திய மாணவர்கள் கல்வியிலும் பின் தங்கி விடக் கூடாது என அவர் ஆலோசனை கூறினார்.


இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மாநில அரசாங்கம் ஆதரவு வழங்கி வரும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கொண்டாட்டத்தில் இசை நிகழ்ச்சி, நடனங்கள் உட்பட பல அம்சங்கள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாங்கள் நன்றி கூறுவதாக இந்நிகழ்ச்சியின் இயக்குனர் திரிஷா கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular