
நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மலேசியர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மலேசிய தரநிலை பயனீட்டாளர்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் சாரல் ஜேம்ஸ் மணியம் வலியுறுத்தினார்.
பிளாஸ்டிக் பயன்பாடு நாட்டில் தூய்மை கேட்டை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இன்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
இன்று உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்திற்கு தென் கொரியா தலைமையேற்றுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் விளைவு ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பள்ளிகள் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எடுத்துக்காட்டாக கோலாலம்பூரில் உள்ள தாமான் மெலாத்தி தேசிய பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் போட்டல்களை சேகரித்து நாற்காலி போல் வடிவமைத்துள்ளனர்.
சரவாக்கில் உள்ள லோங் செபாங்காச் தேசிய பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் ‘பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாள்’ என்ற திட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இப்பள்ளியின் மாணவர்கள் பள்ளி சிற்றுண்டிகள் பிளாஸ்டிக் பயன்பாடுக்கு பதிலாக உணவை உட்கொள்ள வாழை இலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
பினாங்கு மற்றும் மலாக்காவில் பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து வருகின்றனர்.
காலை சந்தைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பதிலாக காகித பொட்டலங்களை பயன்படுத்தி வருகின்றனர் என அவர் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக ஜொகூர் பாரு மாநகர் மன்றம் மற்றும் கூச்சிங் நகரண்மை கழகம் இந்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சொன்னார்.
மாதந்தோறும் வடிகால் மற்றும் ஆறுகளை சுத்தம் செய்ய ஜொகூர் பாரு மாநகர் மன்றம் மக்களுக்கு ஆலோசனை கூறி வருகிறது.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தூய்மை கேட்டை தவிர்க்க மறுசுழற்சி திட்டத்தை கடைப்பிடித்து வருகிறது.
தூய்மை கேடு திட்டத்தின் கீழ் கடந்த 2024 ஆம் ஆண்டில் 4,400 குளிர்பான பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பச்சை பசுமை திட்டத்திற்கு மக்கள் வழங்கும் ஆதரவை இது காட்டுவதாக அவர் சொன்னார்.
பிளாஸ்டிக் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிளாஸ்டிக் பயணித்து காரணமாக கடலில் உயிரினங்கள் பெரும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மக்களின் ஆதரவு இன்றி மாற்றங்கள் நடக்காது. ஆகையால் இந்த விவகாரத்தில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என சாரல் ஜேம்ஸ் தெரிவித்தார்.


