
தனது இரண்டாவது பெரிய மையமான கோத்தா கினபாலுவிலிருந்து தைப்பே வழி ஜப்பானின் ஃபுகுயோகா நகருக்கு ஏர் ஆசியா புதிய விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.
ஃபுகுயோகா நகருக்கு ஏர் ஆசியாவின் ஐந்தாவது புதிய பயண வழி இதுவாகும்.
ஃபுகுயோகா நகருடன் கோத்தா தின பாலுவை இணைக்கும் இந்த கூடுதல் விமான வழிப்பாதை எதிர்வரும் 15 ஆகஸ்ட் 2025-ல் தொடங்குகிறது.
இந்த தினசரி விமான சேவை தைப்பே நகரில் குறுகிய நேர இட நிறுத்தத்திற்கு பிறகு தொடரும்.
சபா பிரஜைகள் ஆசியானுக்கு அப்பாற்பட்டு பயணிக்க இந்த புதிய விமான சேவை ஒரு வாய்ப்பாக அமைகிறது.
தனது விரிவான விமான சேவைகளுக்கு ஏர் ஆசியாவின் முக்கிய மையமாக தைப்பே விளங்குகிறது.
ஜப்பானில் மலேசியர்கள் அதிகமான நகரங்களை கண்டு களிக்க இந்த புதிய விமான சேவை ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இதனிடையே கோத்தா கினபாலுலிருந்து தைப்பே வழி ஃபுகுயோகா நகருக்கு இந்த புதிய சேவையை தொடங்குவதில் தாங்கள் பெரிதும் மகிழ்ச்சி கொள்வதாக ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.

‘எங்களின் கோத்தா கினபாலு மையத்திலிருந்து கூடுதலான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்’ என்றார் அவர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கினபாலு-தைப்பே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியது முதல் இதுவரை 130,000-க்கும் மேற்பட்ட பயணிகளை கொண்டு சென்று உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சுற்றுப்பயண வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆசியாவில் உள்ள சுற்றுப்பயணிகள் பயணிக்க கூடுதல் வாய்ப்புகளை இந்த புதிய விமான சேவை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
சபா பிரஜைகள் தங்களின் பயணத்தை தேர்வு செய்ய இது அதிக வாய்ப்புகளை வழங்குவதாக அவர் சொன்னார்.
சபாவை ஒரு முக்கிய சுற்றுப்பயணம் நகரமாக உருவாக்கும் மாநில அரசாங்கத்தின் இலக்கை இந்த புதிய விமான சேவை நிறைவு செய்யும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய சேவையின் வழி கோத்தா கினபாலு மற்றும் ஃபுகுயோகா நகர்களுக்கியே வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.
இந்த விமான சேவையின் தொடக்கத்தை கொண்டாடும் வகையில் கோத்தா கினபாலுவிலிருந்து ஃபுகுயோகா நகருக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 609-திலிருந்து தொடங்குகிறது.
அதே போல் ஃபுகுயோகா நகரிலிருந்து கோத்தா கினபாவிற்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் JPY 21,390-விருந்து தொடங்குகிறது.
பயணிகள் AirAsia MOVE செயலி அல்லது airasia.com மூலம் சிறப்பு கட்டடத்திற்கான டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.


