Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

விமான பராமரிப்பு துறையில் ஈடுபட இந்திய இளைஞர்கள் முன் வர வேண்டும்!

ஏடியி(ADE) நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மகேஸ் குமார்

விமான பராமரிப்பு துறையில் ஈடுபட இந்நாட்டில் உள்ள இந்திய இளைஞர்கள் முன் வர வேண்டும் என நாட்டின் முன்னணி விமான பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு நிறுவனமான ஏடியி(ADE) நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மகேஸ் குமார் கூறினார்.
விமான பராமரிப்பு துறையில் டிப்ளமோ கல்வித் தகுதியை பெரும் குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கு ஏடியி சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விமான பராமரிப்பு டிப்ளமோ கல்வித் தகுதியை பெற்று ஏடியி நிறுவனத்தில் நுழையும் மாணவர்களின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல் விமான பெண் இஞ்ஜினியர் ஷாலினி ராஜு


விமான பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணியில் டெக்னிசியன் பதவியிலிருந்து தொடங்கும் பணியாளர்கள் விமான பொறியியலாளராக உயர்வு பெற இந்த நிறுவனம் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்
எஸ்பிம் தேர்வில் அறிவியல் மற்றும் கணக்கவியல் பாடங்களில் சிறந்த புள்ளிகளை பெரும் நமது இந்திய மாணவர்கள் விமான பராமரிப்பு துறையில் டிப்ளமோ கல்வித் தகுதியை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு துறையில் சிறந்த எதிர்காலம் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

டெக்னிசியன்களாக பணிபுரியும் ருவன் தனசீலன், சுரேந்திர குமார், சத்திய குமார்

கோழிக் கூண்டிலிருந்து கோபுரமாக உயர்ந்தது ஏடியி!

கோவிட் 19 தாக்கத்திற்கு முன்னர் ஏர் ஆசியா தனது விமானங்களை பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக சீனா, சிங்கப்பூர், தைவான் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வந்தது.
இதற்கான செலவினும் அமெரிக்க டாலரின் செலுத்துவதோடு அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த காலகட்டத்தில் ஏன் இங்கேயே விமான பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பட்டறையை கட்டலாம் என்ற பரிந்துரையை ஏர் ஆசியா நிறுவனர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸிடம் நாங்கள் முன் வைத்தோம்.
இந்த ஆலோசனைக்கு டோனி உடனடியாக இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து 2020-ல் ஏடியி நிறுவப்பட்டது.
அப்பொழுது ஒரு நேரத்தில் ஒரு விமான மட்டுமே பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
அந்த காலகட்டத்தில் ஒரு கோழி கூண்டு போல் தொடங்கிய ஏடியி நிறுவனம் இன்று கோபுரமாக உயர்வு கண்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
இன்று செப்பாங்கில் ஏடியி பட்டறையில் ஒரே நேரத்தில் 14 விமானங்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட முடியும்.

லைசன்ஸ் பெற்ற இஞ்ஜினியர் தாமஸ்


மேலும் ஜொகூர் செனாய் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்த முடியும்.
ஏர் ஆசியா விமானங்கள் மட்டுமின்றி, இதர விமான நிறுவனங்களின் விமானங்களும் இன்று பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்கு கொண்டுவரப்படுகிறது.
தற்போது 10 நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் இங்கு பராமரிப்பு(செர்வீஸ்) பணிகளுக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த பணிகளுக்கு
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் அனுமதியும் எங்களுக்கு கிடைத்துள்ளது.
இதன் வழி ஏடியி நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஏடியி நிறுவனத்தின் வருவாய் வெ 700 மில்லியன்.
கடந்த ஆண்டில் ஏடியி நிறுவனத்தின் லாபம் வெ 150 மில்லியன்.

டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு விமான லைசென்ஸ் திட்டம்

ஏடியி(ADE) நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மகேஸ் குமார் அவர்களை நேர்காணல் செய்யும் அலை ஓசை இணைய நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் ரத்தினம்

விமான பராமரிப்பு டிப்ளமோ கல்வி தகுதியை கொண்ட மாணவர்களுக்கு இங்கு விமான லைசென்ஸ் பயிற்சி திட்டம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
விமான பொறியியலாளராக
(இஞ்ஜினியர்) லைசன்ஸ் திட்டத்திற்கான பயிற்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் ஏடியி ஏற்றுக்கொள்கிறது.
விமான பராமரிப்பு டிப்ளமோ கல்வித் தகுதியை பெற்றுள்ள இந்திய மாணவர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மஹேஸ் குமார் கேட்டுக்கொண்டார்.
விமான இஞ்ஜினியர் தகுதியைப் பெற்றுவிட்டால் ஒருவரின் மாத வருமானம் சுமார் வெ 15,000 என அவர் சுட்டி காட்டினார்.
தற்போது ஏடியி நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு டிப்ளமோ கல்வித் தகுதியை கொண்ட சுமார் 300 முதல் 400 மாணவர்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனத்தில் தற்போது 1,700 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மலேசியாவிற்கு வெளியே சுமார் 500 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
தென்கிழக்கு ஆசியாவில் 25 விமான நிலையங்களில் ஏடியி நிறுவனங்கள் இயங்கி வருகிறது.


விமான இஞ்ஜினியர் பணி என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களும் இந்த துறையில் ஈடுபடலாம்.
இந்த நிறுவனத்தில் ஷாலினி ராஜு என்பவர் விமான இஞ்ஜினியராக பணியாற்றி வருவது பெருமையை தருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் பெண் டெக்னிசியனாக ஷோபனா மற்றும் ஷர்மிளா தேவி பணிபுரிந்து வருகின்றனர்.
விமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு துறையில் நமது இந்திய இளைஞர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். இந்த துறையில் சிறந்த எதிர்காலம் இருப்பதாக அவர் சொன்னார்.

டெக்னியன்களாக பணிபுரியும் ஷோபனா, ஷர்மிளா தேவி


கிள்ளானில் பிறந்து வளர்ந்த 40 வயதுடைய மஹேஸ் குமார் இந்தியா கோயம்புத்தூரில் உள்ள நேரு விமான பொறியியல் கல்லூரியில் தமது பட்டப் படிப்பை மேற்கொண்டார்.

ADE Website : https://www.ade.aero/
ADE LinkedIn : https://www.linkedin.com/company/ade-aero/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular