Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது வண்ண விழா!

தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தின் பல கூறுகளை தமிழ் வண்ண விழா பிரதிபலிப்பதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இது போன்ற விழாக்கள் மூலம் இளைய தலைமுறையினர் நமது கலாச்சாரத்தின் மாண்புகளை நன்கு உணர வாய்ப்பளிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நேற்று இங்கு எம்பிபி,எஸ்ஆர்எல்ஏ கலை கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த தமிழ் வண்ண விழாவை தொடைக்க வைத்து அவர் பேசினார்.


இது போன்ற விழாக்கள் நமது இளைஞர்களுக்கிடையே தமிழ் கலாச்சாரத்தின் மாண்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நமது இளைய சந்ததியினர் இந்திய கலாச்சாரத்தின் மாண்பை தொடர்ந்து கடைப்பிடிக்க இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த வண்ண விழா கொண்டாட்டத்தை வெற்றியடை செய்த அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார். இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் பாப்பா ராய்டு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular