
அண்மையில் 12 ஆவது உலக அமைதி பிரகடன தினத்தை நினைவு கூறும் வகையில் இங்கு கூச்சிங்கில் அமைதி நடைப்பயணம் நடத்தப்பட்டது.
உலக அமைதிக்கான இயக்கமான HWPL ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
ICATS கல்லூரியின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த அமைதி நடை பயணத்தில் இளைஞர் அணி தலைவர்கள், மாணவர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த அமைதி நடைபயணம் பொதுமக்களின் ஒற்றுமை மற்றும் அமைதி கலாச்சாரத்தை எப்படி வலுப்படுத்துவது என்பதை பிரதிபலிப்பாக பத்து கித்தாங் வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ லோ கெர் சியாங் கூறினார்.
அமைதி என்பது மோதல்களை தவிர்ப்பது மட்டுமின்றி தொடர்பை வலுப்படுத்துவதும் ஆகுமென அவர் சொன்னார்.
அமைதி என்பது ஒற்றுமைக்கான பாலம் போன்றது. இந்த பாலம் வலிமையுடன் இருக்க தனி நபர்களின் பங்கும் மிக அவசியம் என்றார் அவர்.
இந்த அமைதி அனைத்துலக அரங்கில் தொடங்குவது அல்ல. நாம் அனைவரிடமிருந்து தான் தொடங்க வேண்டும். ஒருவர் மற்றொருவருடன் பேசும் விதம் மற்றும் மற்றும் கேட்கும் விதம் என்பது தான் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு பிறகு சரவாக்கின் பல்லின மக்களை பிரதிபலிக்கும் ஒற்றுமை சின்னமான டாருல் ஹானா பாலத்தில் அனைவரும் நடை பயணம் சென்றனர்.

இந்த நடைப்பயணத்தில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அமைதி சூழலில் இந்த நடைபயணம் நடைபெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
மலேசியா ஒரு அமைதியான நாடு என இந்த நடைபயணத்தில் கலந்து கொண்ட இங்குள்ள எஸ்கே புடு பள்ளியின் ஒரு ஆசிரியரான லொரேத்தா செராமாய் கோங் கூறினார்.
இந்நாட்டில் போர் அல்லது துப்பாக்கி சம்பவத்திற்கு இடமில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
HWPL அமைதி இயக்கம் உலகின் இதர பகுதிகளுக்கு அமைதியை கொண்டு செல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நாட்டில் மட்டுமின்றி உலகளவில் அமைதி வலுப்படுத்த ஒற்றுமையை பிரதானம் என அவர் சொன்னார்.
இதனிடைய இந்த அமைதி நடை பயணம் அர்த்தமுள்ள ஒன்று என ICATS கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் லியோ சிங் லிம் கூறினார்.
கூச்சிங் ஒற்றுமைக்கான நகரம் என்பதால் இந்த அமைதி நடை பயணம் மிகப் பொருத்தமாக இருந்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களிடையே ஒற்றுமையின் அவசியத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

2025-ல் தென் கொரியாவை தளமாகக் கொண்ட HWPL இந்த நினைவு நாளை 61 நாடுகளில் சுமார் 94 இடங்களில் நடத்துகிறது.
உலகளாவில் 1,600 பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
கடந்த 2013 மே 25 ஆம் தேதி தென் கொரியா சியோல் நகரில் HWPL தலைவர் Man Hee Lee அமைதி பிரகடனத்தை அறிவித்தார்.
உலக கண்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் இந்த அமைதி நடை நடத்தப்படுகிறது.
உலகளவில் அமைதியை நிலைநிறுத்த தாம் உலகை சுற்றி வருவதாக 10 நினைவாண்டின் போது Man Hee Lee கூறியுள்ளார்.
பள்ளிகளிலும் மற்றும் வீடுகளிலும் அமைதி குறித்து வலியுறுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் அமைதி தூதுவராக இருந்தால் தான் அமைதி நிலைபெறும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர், மகளிர் மற்றும் அனைத்துலக ஒத்துழைப்புடன் உலக அமைதிக்கு HWPL போராடும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


