
அண்மையில் நடைபெற்ற 15 ஆவது அனைத்துலக ஊட்டி கராத்தே போட்டியில் மலேசியாவின் யோகிஷா தனபாலன் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
அண்மையில் தமிழ்நாடு ரேக்ஸ் பள்ளி ஊட்டி விளையாட்டு அரங்கத்தில் இந்த கராத்தே போற்றி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஜாலான் புக்கிட் காஜாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் 16-17 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான காத்தா பிரிவில் தங்கப் பதக்கம் என்று மலேசியாவிற்கு பெருமை சேர்த்ததாக மலேசியா ஒக்கினாவா ஃபிரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தின் ஹன்சி டாக்டர் விஜய் கூறினார்.
இந்த போட்டியில் மொத்தம் 260 போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.
இந்த போட்டியின் ஏற்பாட்டாளர்கள் இந்திய கராத்தே பள்ளியைச் சேர்ந்த டாக்டர் ரென்ஷி கார்த்திகேயன் மற்றும் ரென்ஷ வனிதா ஆகியோருக்கு அவர் நன்றி கூறினார்.
மேலும் இந்த போட்டியை வெற்றியடை செய்த போட்டியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்தியா ஒக்கினாவா கோஜூ-ரு உடுமலை ப் பேட்டையின் சிஹான் அருள் ஆகியோருக்கு அவர் நன்றி கூறினார்.


