Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கத்திற்கு “துன் அப்துல்லா அகமட் படாவி தேசிய அரங்கம்” என பெயர் மாற்றம் செய்யும் பரிந்துரை

மலேசியாவின் 5-ஆவது பிரதமரான துன் அப்துல்லா அகமட் படாவி அவர்களின் நினைவாக, புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கத்திற்கு “துன் அப்துல்லா அகமட் படாவி தேசிய அரங்கம்” என பெயரிட வேண்டும் என ம.இ.கா. தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா பரிந்துரை செய்தார்.

பக் லாஹ் என அன்புடன் அழைக்கப்பட்ட அல்லாயர்ஹாம் துன் அப்துல்லா, ஒரு மிகுந்த பணிவும், நேர்மையும் கொண்ட தேசியத் தலைவர். அவரின் ஆட்சிக் காலம் மிதவாதம், நல்லாட்சி மற்றும் மத உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்றார் அவர்.

அவருடைய முக்கியப் பங்களிப்புகள்:

மலேசியாவின் 5-ஆவது பிரதமர் (2003–2009) – துன் மகாதீர் முகமட் அவர்களை தொடர்ந்து, அமைதியான மற்றும் மக்களுடன் நெருக்கமான ஆட்சியைக் கொண்டுவந்தார்.

இஸ்லாம் ஹதாரி கொள்கையை அறிமுகப்படுத்தினார் – மத சீர்திருத்தத்துக்கு உதவும், முல்டி-ரேசிய அரசமைப்புக்கு ஏற்பவாக இருந்தது.

நேர்மையான நிர்வாகத்தை வலுப்படுத்தினார் – மலேசிய நேர்மைக் கழகம் மற்றும் ஊழல் தடுப்பு முகமை (BPR) ஆகியவற்றை வளர்த்தார்.

கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டை முன்னேற்றினார் – தொழில்நுட்பக் கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்களை ஊக்குவித்தார்.

விலைகுறைந்த விவசாயத்தை வணிகமாக மாற்ற முயற்சி செய்தார் – “Agriculture as Business” கொள்கையை ஏற்படுத்தினார்.

மண்டல பொருளாதார வளர்ச்சி திட்டங்களை தொடங்கினார் – இச்கந்தர் மலேசியா, NCER, ECER, SCORE போன்றவை.

அவரால் வகிக்கப்பட்ட முக்கிய அமைச்சுத் துறைகள்:

கல்வி அமைச்சர்

பாதுகாப்பு அமைச்சர்

வெளிநாட்டு அமைச்சர்

உள்நாட்டு அமைச்சர்

துணைப் பிரதமர்

மற்றும் பல முக்கிய அமைச்சுப் பதவிகள்

இந்த அரங்குக்கு அவரது பெயரை வழங்குவது, அவரது சேவையை மதிக்கும் ஒரு தேசிய அஞ்சலாகவும், எதிர்கால தலைமுறைக்கு ஒரு சிந்தனையாகவும் அமையும்.

அரசாங்கம், குறிப்பாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சும், மத்திய அமைச்சரவையும் இந்த பரிந்துரையை கவனமாக பரிசீலிக்குமாறு தாம் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular