Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஒரு குறிப்பிட்ட நபருக்காக சட்ட பாதுகாப்பு சலுகையா?

இந்நாட்டில் ஒரு குறிப்பிட்ட நபருக்காக மலேசிய நீதிமன்றம் சட்டப் பாதுகாப்பு சலுகையை வழங்கக்கூடாது என பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
தமது முன்னாள் உதவியாளர் யூசோப் ராவுத்தரின் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பாக தொடுத்துள்ள சிவில் வழக்கில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விண்ணப்பித்துள்ள சட்ட பாதுகாப்பு சலுகை குறித்து அவர் கருத்துரைத்தார்.
பிரதமரின் இந்த நடவடிக்கை சட்டத்தின் மாண்பு கொள்கைக்கு சவால் விடுவது போல அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சாதாரண குடி மக்களுக்கு விதிக்கப்படும் சட்டத்தைவிட பிரதமர் அப்பாற்பட்டவரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் v டத்தோ ஹாருண் இட்ரிஸ்(1997) வழக்கில் ‘சட்டத்திற்கு மேற்பட்ட நபர் யாரும் இல்லை’ என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அதே போன்று தே செங் போ v அரசு தரப்பு வழக்கறிஞர் (1979) வழக்கில் நீதித்துறை நடைமுறைப்படுத்தும் நீதிய ஆக்கிரமிப்பு செய்ய அதிகாரம் யாருக்கும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அவர் கோடி காட்டினார்.
நீதித்துறை நடைமுறையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி தான் இந்த விண்ணப்பம் என அவர் வினவினார்.
உயர் பதவியை வகிக்கும் ஒருவர் சட்ட பாதுகாப்பு சலுகையை பெற நீதித்துறை அனுமதிக்க கூடாது என அவர் வலியுறுத்தினார்.
உயிர் பதவியை வகிப்பவர்களுக்கும் சாதாரண பாமர மக்களுக்கும் சட்டம் ஒன்று தான் என அவர் நினைவுறுத்தினார்.
சிவில் வழக்கை எதிர் நோக்கம் எந்த ஒரு தனி நபருக்கும் சட்ட பாதுகாப்பு சலுகை வழங்கப்படக்கூடாது என அவன் நினைவுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular