
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு அதன் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தலைமையற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சின் பணிகள் குறித்தும் அமைச்சின் பணியாளர்களின் கடமைகள் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
2025 ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்றுள்ளதை தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் பங்கு குறித்து அவர் வலியுறுத்தினார்.
ஆசியானுக்கு மலேசியா தலைமை ஏற்றுள்ளதை தொடர்ந்து இவ்வாண்டு முழுவதும் 300க்கும் மேற்பட்ட கூட்டங்கள் மற்றும் திட்டங்களை மலேசியா நடத்தும் என அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த கூட்டங்கள் மற்றும் திட்டங்களில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நூலகம் மற்றும் தேசிய காப்பகம் பங்கு பெறும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தத் திட்டங்கள் வெற்றி அடைய தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பின் பணியாளர்களின் அர்ப்பணிப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
ஆசியானுக்கு மலேசியா தலைமை ஏற்றுள்ளதால் அதன் வெற்றிக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


