Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ராபிஸி-நிக் நஸ்மி அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்!

அண்மைய பிகேஆர் தலைமைத்துவ தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ராபிஸி ரம்லி மற்றும் நிக் நாஸ்மி நிக் தங்களின் அமைச்சர் பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.
பொருளாதார அமைச்சர் பதவியை தாம் ராஜினாமா செய்வதாக பிகேஆர் துணைத் தலைவர் பதவியை தற்காக்க தவறிய பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ராபிஸி இன்று அறிவித்தார்.
தமது ராஜினாமா எதிர்வரும் 17 ஜூன் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த கட்சி தேர்தல் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நூருல் இஸா அன்வாரிடம் ராபிஸி தோல்வி கண்டார்.
இதனிடையே தமது ராஜினாமா எதிர்வரும் 17 ஜூலை 2025 முதல் நடைமுறைக்கு வரும் என இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான நிக் நாஸ்மி அறிக்கை ஒன்றில் கூறினார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த பிகேஆர் உதவித் தலைவர் போட்டியில் செத்தியா வங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான ராபிஸி அணியைச் சேர்ந்த நிக் நாஸ்மி தோல்வி கண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular