Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ராபிஸி-நிக் நஸ்மி பதவி விலகல்:இது ஒரு அரசியல் நாடகமே!

அண்மைய
பிகேஆர் தலைமைத்துவ தேர்தலில் தோல்வி கண்ட ராபிஸி ரம்லி மற்றும் நிக் நாஸ்மி நிக் நாஸ்மி தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளது வெறும் அரசியல் நாடகமென பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுதற்காக இந்த இரு தலைவர்களும் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தாருந்தால் அது வரவேற்கத்தக்க ஒன்று என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆனால் அந்நிய கட்சி தேர்தலில் துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளுக்கான போட்டிகளில் இவ்விருவரும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அமைச்சர் பதவுகளை ராஜினாமா செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அடுத்து வரும் கட்சித் தேர்தலில் இந்த இரு தலைவர்களும் மீண்டும் இந்த பதிவுகளுக்கு போட்டியிடுவர் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை என அவர் சொன்னார்.
அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால் இவர்கள் தியாகிகள் அல்ல என்ன அவர் சொன்னார்.
பொருளாதார அமைச்சர் ராபிஸி மற்றும் இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நாஸ்மி ஆகியோரின் இந்த ராஜினாமா, பிகேஆர் கட்சியில் உட்பூசல்கள் வெடித்துள்ளதை சித்தரிப்பதாக அவர் கோடி காட்டினார்.
எதிர்வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிகேஆர் பெரும் சவாலை எதிர் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
இந்நாட்டு மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அன்வார் தலைமையிலான நடப்பு அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular