Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பணி ஓய்வு வயதை கட்டும் கட்டமாக உயர்த்த வேண்டும்!

பணி ஓய்வு வயதை கட்டும் கட்டமாக உயர்த்த வேண்டும் என புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாகரன் பரிந்துரை செய்தார்.
பணி ஓய்வு வயதை 60 வயதில் இருந்து 65 வயதாக உயர்த்தப்பட வேண்டும் என பிரதமராக அமைச்சர் (சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) அஸாலினா ஒத்மானின் பரிந்துரையை தாம் வரவேற்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரத்தில் சமநிலை மற்றும் ஒட்டுமொத்த அணுகுமுறை தேவை என்பதால், இதன் அமலாக்கும் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரம் இளைய தலைமுறையினரின் வேலை வாய்ப்பு, மூத்த குடிமக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதாரம் போன்றவற்றிற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
60 வயதிற்கும் மேற்பட்ட அதிகமான மலேசியர்கள் அதிக அனுபவம் கொண்டவர்கள் என்பதை நம்மால் மறுக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டினார்.
இவர்கள் தொடர்ந்து சேவையில் இருந்தால் மக்களுக்கு நன்மையை தரும் ஏன் அவர் சொன்னார்.
60 வயதை அடையும் பணியாளர்கள் இன்னும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என ராஜீவ் கூறினார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் அரசாங்கம் விவேகமாக செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular