Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சுபாங்கிலிருந்து முதலாவது அனைத்துலக விமான சேவையை பாத்திக் ஏர் தொடங்குகிறது!

சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து தனது முதலாவது அனைத்துலக விமான சேவையை முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் தொடங்குகிறது.
எதிர்வரும் 28 ஜூலை 2025 முதல் சுபாங்கிலிருந்து பேங்காக்கின் டான் மியூயாங் அனைத்துலக விமான நிலையத்திற்கு பாத்திக் ஏர் சிறகடிக்கவுள்ளது.
இந்த தினசரி விமான சேவை பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கள் என்று தான் கூற வேண்டும்.
அன்றைய தினமே சுபாங்கிலிருந்து கூச்சிங் நகருக்கு தினசரி நேரடி விமான சேவையை பாத்திக் ஏர் மேற்கொள்ளவருகிறது. இதன் வழி சுபாங்கிருந்து உள்நாட்டு விமான சேவையை பாத்திக் ஏர் வலுப்படுத்துகிறது.
சுபாங் விமான நிலையத்தை ஒரு துடிப்பான விமான மைய நகரமாக மாற்றும் பாத்திக் ஏரின் முயற்சியின் இது ஒரு பகுதியாகும்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (கேஎல்ஐஏ) ஒரு மாற்று விமான நிலையமாக இந்த விமான நிலையம் பயணிகள் எளிதில் செல்ல முடியும்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் 90 இலட்சம் மக்கள் எளிதாக சுபாங்கை சென்றடைய முடியும்.
இந்த புதிய சேவையின் மூலம் தாய்லாந்து தலைநகரான பேங்காக்கை கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் தடையின்றி எளிதில் சென்றடைய முடியும்.


கலாச்சாரம், உணவு, பொருட்கள் வாங்குதல் மற்றும் சாகசங்களை விரும்பும் மலேசியர்களுக்கு இந்த புதிய விமான சேவை ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நகர்ப்புற இடங்களான பெட்டாலிங் ஜெயா,ஷா ஆலம் மற்றும் கோலாலம்பூர் சுபாங்கிற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
பெரிய விமான நிலையங்களின் நெரிசலை தவிர்க்க கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திற்கு எளிதில் சென்றடையலாம்.
அதே வேளையில் சுபாங்-கூச்சிங் விமான சேவையின் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கு பயணிகள் கூச்சிங் நகருக்கு எளிதில் தடையின்றி பயணிக்க முடியும்.
இந்த புதிய விமான சேவை மேற்கு மலேசியர்கள் போர்னியோவின் வளமிக்க கலாச்சாரத்தை கண்டறிய ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இந்த புதிய விமான சேவைகளின் வழி தாய்லாந்து மற்றும் கிழக்கு மலேசியாவை சேர்ந்த மக்கள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரின் சிறப்புகளை கண்டறிய ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இதனிடையே இந்த புதிய விமான சேவைகள் கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் தாய்லாந்து மற்றும் கிழக்கு மலேசியாவிற்கு தடையின்றி எளிதில் செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
ஒரு நவீன மைய நகரமாக சுபாங்கின் உருமாற்றத்திற்கு முன்னணி வகிப்பதில் தாங்கள் பெருமை கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு மாற்றாக நேரத்தை சேமிக்கும் வாய்ப்பை சுபாங் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
வரும் கால விமான போக்குவரத்து துறையில் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் முக்கிய பங்காற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுபாங்குடன் இணைந்து கிள்ளான் பள்ளத்தாக்கு வாசிகளுக்கு நாம் உலகத்தை அருகில் கொண்டு வருகிறோம் என அவர் சுட்டி காட்டினார்.
பேங்காக் மற்றும் கூச்சிங் தினசரி சேவையுடன் சுபாங்கிலிருந்து பினாங்கு, கோத்தா பாரு மற்றும் கோத்தா கினபாலு ஆகிய நாகர்களுக்கு பாத்திக் ஏர் நேரடி விமான சேவை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது சுபாங்கிலிருந்து 5 நகர்களுக்கு பாத்திக் ஏர் விமான சேவைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தில் பாத்திக் ஏர் வலிமையாக கால் பதித்து அனைத்துலக விமான சேவைகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
கூடுதல் தகவல்களுக்கும் உங்கள் அடுத்த பயணத்தை திட்டமிடவும் பாத்திக் ஏர் செயலி அல்லத www.batikair.com இணையத்தில் வலம் வரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular