
நேற்று தலைநகரில் தொடங்கிய ஆசியான் 2045 மாநாட்டில் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
கோலாலம்பூர் பிரகடனம் 2045-ல் ஆசியான் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
சமூகம், அரசியல்-பாதுகாப்பு, பொருளாதாரம், ஆசியான் சமூக கலாச்சாரம் ஆகிய அம்சங்கள் இந்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வரலாற்றுப் பூர்வ மாநாட்டில் கலந்து கொள்வதில் தாம் பெருமை கொள்வதாக சரஸ்வதி கூறினார்.
இன்னும் அமைதியான ஆசியானை உருவாக்க ஆசியான் தலைவர்களுடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது தமக்கு மகிழ்ச்சியை தருவதாக அவர் தெரிவித்தார்.
நேற்று 46 ஆவது ஆசியான் மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் ஆசியான் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



