
சரவாக் மாநிலத்தில் சமூக உணர்வு மற்றும் கலாச்சார பெருமையுடன் அறுவடை காலமான காவாய் தினத்தை உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா கொண்டாடத் தொடங்கியது.
இங்கு பாடாவான் பிராந்தியத்தின் கம்போங் சிம்புக் சமூகத்துடன் ஏர் ஆசியா இணைந்து இந்த கலாச்சா, புத்தாக்க மற்றும் வண்ணமிக்க கொண்டாட்டத்தை தொடங்கியது.
இந்த கொண்டாட்டத்தின் முக்கிய அம்சத்தில் ஒன்று தெப்ப அலங்கார போட்டி. இந்தப் போட்டியில் உள்ளூர் கைவினை திறனாளிகள் தங்களின் திறன்களை வெளிப்படுத்த இந்த கொண்டாட்டம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இவ்வாண்டு இந்த கொண்டாட்டத்தில் மக்களின் விமான நிறுவனமான ஏர் ஆசியா ஒரு சமூக பங்காளியாக இணைந்து, இங்குள்ள சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆசியான் வட்டாரத்தில் மக்கள், பாரம்பரியம் மற்றும் இடங்களை இணைக்க ஒரு முக்கிய விமான நிறுவனமாக ஏர் ஆசியா தொடர்ந்து செயல்படும்.
விறுவிறுப்பான நகரங்களில் மட்டுமின்றி உள்ளூர் மக்களை விமானங்களில் மட்டுமின்றி தனது கலாச்சார அனுபவங்களின் வழி இணைக்க ஏர் ஆசியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே மக்களுக்காக மக்களால் நிறுவப்பட்ட ஒரு விமான நிறுவனம் என்ற நிலையில் இந்த கால்வாய் கொண்டாட்டத்தில் பங்கு பெறுவதில் தாங்கள் பெருமை கொள்வதாக ஏர் ஆசியா மலேசியா விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
கிழக்கு மலேசியாவில் உள்ள சமூகங்களுடன் இந்த காவாய் கொண்டாட்டத்தில் பங்கு பெறுவதை ஏர் ஆசியா ஒரு அருமையான வாய்ப்பாக கருதுவதாக அவர் சுட்டி காட்டினார்.
இந்த கொண்டாட்டம் நமது வளம் கொண்ட பாரம்பரியத்தை நினைவு கூறுகிறது. இது போன்ற கொண்டாட்டங்களில் கிழக்கு மலேசிய சமூகங்களுடன் ஒன்றிணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சியை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் கம்போங் சிம்புக் நுழைவாயிலை ஏர் ஆசியா குழுவினர் சிவப்பு வண்ணத்தில் அலங்காரப்படுத்தி இங்குள்ள மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த கிராமத்து மக்களுக்கு இவ்வாண்டின் காவாய் தின கொண்டாட்டம் ஒரு விதமான புத்துணர்ச்சியை தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கொண்டாட்டத்திற்காக ஏர் ஆசியா கூச்சிங் மற்றும் கோலாலம்பூர், சிங்கப்பூர் ஜாக்கார்த்தா உட்பட இதர நகரங்களுக்கிடையே குறிப்பிட்ட கால நேரத்திற்கு ஊக்குவிப்பு கட்டணமாக அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 119-யிலிருந்து தொடங்குகிறது.
அதே வேளையில் இந்த ஊக்குவிப்பு கட்டணம் கோத்தா கினபாலுவிருந்து தாவாவ்,சாண்டகான்,கூச்சிங், மற்றும் கோலாலம்பூர் நகர்களுக்கு ஒரு வழி பயணம் கட்டணமாக வெ 69-லிருந்து தொடங்குகிறது.
இந்த ஊக்குவிப்பு கட்டணத்தில் 26 மே 2025 மற்றும் 9 ஜூன் 2025 வரை பயணிக்கலாம்.
இந்த ஊக்குவிப்பு கட்டணத்திற்கான முன் பதிவு இப்பொழுது முதல் 1 ஜூன் 2025 வரை தான்.
இந்த ஊக்குவிப்பு கட்டணத்திற்கான டிக்கெட்டுகளை Air Asia MOVE செயலி அல்லது airasia.com இணையத்தின் வழி கொள்முதல் செய்து கொள்ளலாம்.


