
நேற்று நடைபெற்று முடிந்த பிகேஆர் தலைமைத்துவ தேர்தலில் கட்சியின் துணைத் தலைவராக நூருல் இஸா அன்வார் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியுமான நூருலுக்கு 9,803 மற்றும் நடப்பு துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான ராபிசி ராம்லிக்கு 3,801 வாக்குகளும் கிடைத்தன.
இந்த தலைமைத்துவ தேர்தலில் கட்சியின் உதவித் தலைவர்களாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேற்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த உதவி தலைவர் போட்டியில் ராபிஸி அணியியை சேர்ந்த முன்னாள் உதவி தலைவர் நிக் நாஸ்மி தோல்வியடைந்தார்.
கட்சியின் உச்ச மன்ற பதவிக்கான போட்டியில் 20 இடங்களில் முதல் நிலையில் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி பாட்சில் இடம் பெற்றுள்ளார்.
கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தாம் தோல்வியுற்றால் பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ராபிஸி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
பிகேஆர் பேராளர்கள் மாநாடு இன்று இங்குள்ள வோட்டர் பிரான்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.


