
இங்குள்ள லாருட்,மாத்தாங் மற்றும் செலாமா மாவட்ட தமிழ் பள்ளிகளுக்கு புத்தக அன்பளிப்பு தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இளைய சந்ததியினருக்கிடையே வாசிக்கும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமது அமைச்சு தேசிய நூலகத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் கலாச்சாரத்தை ஏற்படுத்த தமது அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய நூலகம் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வாசிப்பு பழக்கத்தின் வழி ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என தாம் நம்புவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நாட்டில் உள்ள பல்லின மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த வாசிப்பு கலாச்சாரத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.
பள்ளி நூலகங்களில் தரமான வாசிப்பு புத்தகங்கள் இடம் பெறுவது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மாணவர்களுக்கிடையே வாசிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


