Friday, November 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இளைஞர்கள் தங்களின் கருத்துக்களை துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.

கோலா திரங்கானு, நவ 27
இளைஞர்கள் தங்களின் கருத்துக்களை துணிந்து வெளிப்படுத்த வேண்டும் என திரங்கானு மந்திரி பெசாரின் முஸ்லிம் அல்லாதவர் விவகார பிரிவின் சிறப்பு அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
கருத்து வேறுபாடுகளை செவிமடுத்து அதற்கு மதிப்பளிக்க இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.
இங்கு மலேசியா திரங்கானு பல்கலைகழகத்தில் அனைத்துலக தமிழ் விவாத போட்டி மற்றும் அனைத்துலக இந்து இளைஞர் மாநாடு ஆகியவற்றை தொடக்கி வைத்து திரங்கானு பாஸ் ஆதரவு பேரவையின் தலைவருமான அவர் பேசினார்.
பிறரின் மரபுகளுக்கு மதிப்பளித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நற்பண்புகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இளைஞர்களின் பயனுள்ள கருத்துக்களை செவிமடுக்க மக்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் சொன்னார்.
திருவள்ளுவர் தாம் படைத்த ஒவ்வொரு திருக்குறளிலும் பல உண்மை தத்துவங்களை வெளிப்படுத்தி உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
648 ஆவது குரலில்….
‘விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்
நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்’ என திருவள்ளுவர் கூறியுள்ளார்.
ஒருவர் தன்னடக்கத்துடன் வெளிப்படுத்தும் தெளிவான கருத்துக்களை செவிமடுக்க உலகம் தயாராக உள்ளது என்பது தான் அர்த்தம் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக படைத்த மலேசிய திரங்கானு பல்கலைகழகத்தின் பாரதம் கிளப்பிற்கு தாம் நன்றி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பொது விவாத போட்டியில் மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular