
பெர்லிங் நவ 27
பெர்லிங் சட்டமன்ற தொகுதியில் தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இங்குள்ள தாமான் புக்கிட் இன்டா மண்டபத்தில் நடைபெற்ற இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஜொகூர் மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் பெர்லிங் சட்டமன்ற உறுப்பினருமான பன்னீர் செல்வம் தலைமை ஏற்றார்.
இந்தக் கொண்டாட்டத்தில் சிறப்பு பிரமுகர்களாக மேலவை துணைத் தலைவர் டத்தோ நூர் ஜஸ்லான், மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், கட்சியின் உதவி தலைவர் டத்தோ அசோஜன், இஸ்காந்தார் புத்ரி ஹர வாரியத்தின் நிர்வாக செயலாளர் டத்தோ ஹாஜி அப்துல் ராஷிட் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கொண்டாட்டத்தில் உறுமி அடித்தல், கோலாட்டம் உட்பட பல சிறப்பு அம்சங்கள் நடைபெற்றன.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பல இன மக்கள் கலந்து கொண்டது இந்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக பன்னீர்செல்வம் கூறினார்.
இந்த கொண்டாட்டம் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பை வழங்கிய ஏற்பாட்டு குழுவினருக்கு தாம் தமது நன்றியை வெளிப்படுத்திக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.



