Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

வருடாந்திர விளையாட்டு போட்டியை குணா தொடக்கி வைத்தார்

இங்குள்ள சிரம்பான் ஜெயா 1 தேசியப் பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டியை சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் தொடக்கி வைத்தார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் இப்பள்ளியின் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியது தமக்கு மகிழ்ச்சியை தருவதாக குணா கூறினார்.
இப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு போதுமான பயிற்சிகளை தந்துள்ளது பெருமை அளிப்பதாக அவர் சொன்னார்.


மழை பொழிந்து கொண்டிருந்த போதிலும் வருகை புரிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வந்தது மகிழ்ச்சி தருவதாக அவர் சொன்னார்.
மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்த விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கு மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குணா பரிசுகளை எடுத்து வழங்கினார்.


நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குணா தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular