
பெட்டாலிங் ஜெயா ஏப் 28
வாழ்க்கை மற்றும் மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களை இரத்த தானம் செய்து நாம் காப்பாற்ற வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்பதற்கு ஏற்ப இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று எங்கு 1,639 ஆவது உலகளாவிய ரத்த தான நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
ஒரு யுனிட் இரத்தம் மூன்று உயிர்களை காப்பாற்றும் என்பதால் இதன் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கை மிகப்பெரிய பரிசாகும். இரத்த தானம் செய்வதின் வழி ஒருவருக்கு அந்த பரிசை நீங்கள் வழங்குகின்றனர் என அவர் சுட்டிக் காட்டினார்.
இங்கு வருகை புரிந்திருக்கும் தொண்டூழியர்கள் பிறர் மீது பரிவை காட்டுகிறீர்கள் என்பதை தம்மால் உணர முடிகிறது என்றார் அவர்.

ஒரு நல்ல நோக்கத்திற்காக பல தரப்பை சேர்ந்த மக்கள் ஒன்று கூடுவது நல்லிணக்கத்தை பிரதிபலிக்கிறது என்பதை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் என்ற நிலையில் தம்மால் உணர முடிகிறது என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஒருமைப்பாடு, சமூக மேம்பாடு மற்றும் தன்னார்வலை பிரதிபலிக்கும் 730 நிகழ்ச்சிகளை தமது அமைச்சு நடத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


