Wednesday, April 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சமூக நல்லிணக்கத்தை பராமரிக்க ஏஐ முக்கிய பங்காற்றுகிறது

நாட்டில் சமூக நல்லிணக்கத்தை பராமரிக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கியவியல் முக்கிய பங்காற்றுவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
சமூக ஊடகங்களை கண்காணிக்கவும் எதிர்மறையான உணர்வுகளை அடையாளம் காணவும் ஏஜ பயன்படுத்தலாம் என்றார் அவர்.
நேற்று இங்கு நல்லிணக்க முன்னெடுப்பு மீதான கலந்துரையாடல் திட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
ஒற்றுமை மற்றும் கலாச்சாரம் தொடர்பான கல்வியில் மக்கள் தங்களின் அனுபவத்தை அதிகரித்துக் கொள்ள ஏஐ துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


நல்லிணக்க அடையாள த் திட்டத்தை கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் தேசிய ஒருமைப்பாட்டு இலாகா வெற்றிகரமாக நடத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தத் திட்டத்திற்கு பல்லின சமூகத்தின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் ஒருமைப்பாட்டின் உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்துவதில் இத்திட்டம் வெற்றி கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் கடந்த போதிலும் நல்லிணக்கத்தை பராமரிப்பது நம் அனைவரின் தார்மீக கடமையாகும்.
நாட்டில் நல்லிணக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்த ஏஐ மற்றும் இலக்கிவியல் பெரும் பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் பல்லின மக்களின் வழிப்பாட்டு தளங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்ந்து வலுபெற வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular