
மலேசிய இந்து தர்ம மாமன்றத்திற்கு தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நன்கொடை வழங்கினார்.
2025 தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இந்த நன்கொடையை தாம் வழங்கியதாக துணையமைச்சர் சரஸ்வதி கூறினார்.
இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு இந்த தொகை முழுமையாக பயன்படுத்தப்படும் என நாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தின் ஒற்றுமை தொடர்பான திட்டங்களுக்கு இந்த தொகை பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இன்று தமது சேவை மையத்தில் இந்த தொகைக்கான காசோலையை மலேசியா இந்து தர்ம மாமன்றத்தின் பிரதிநிதியிடம் அவர் வழங்கினார்.


