
முன்னாள் மஇகா தலைவரும் அமைச்சருமான காலஞ்சென்ற துன் சம்பந்தனின் அரசியல் அர்ப்பணிப்பை நினைவு கூற தேசிய அளவில் ஒரு பேச்சுப்போட்டி நடத்தப்பட விருப்பதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
துன் சம்பந்தனின் அயராத உழைப்பால் உதயமான தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஆதரவுடன் இந்த தேசிய அளவிலான பேச்சுப் போட்டி நடத்தப்பட விருப்பதாக அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு தேசிய அருங்காட்சியகத்தில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ சகாதேவனுடன் நடத்திய சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் இந்திய சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு துன் சம்பந்தனின் அர்ப்பணிப்பு நாம் மறந்துவிட முடியாது.
இந்த மாபெரும் தலைவரின் அர்ப்பணிப்பை இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட விருப்பதாக அவர் சொன்னார்.
இந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள நபர்கள் துன் சம்பந்தனின் அரசியல் அர்ப்பணிப்பை அடிப்படையாக கொண்டு தான் பேச வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.


