Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து இருக்கைகளுக்கும் 25 % தள்ளுபடியை ஏர் ஆசியா வழங்குகிறது!

தான் சிறகடிக்கும் 130 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு, அனைத்து இருக்கைகளுக்கும் ஏர் ஆசியா 25 விழுக்காடு தள்ளுபடியை வழங்குகிறது.
ஏர் ஆசியா மலேசியா (AK) அடையாளம் கொண்ட மீரி,கூச்சிங், டார்வின்,காவோஸியுங், ஜெய்ப்பூர், லக்னோ,கிராபி,சியாங் மாய்,டாலாட்,குய்லின்,குவான்ஷாவ் உட்பட பல நகர்களுக்கு இந்த 25 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
உள்நாட்டில் அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 64-லிருந்து தொடங்குகிறது.
அனைத்துலக நகர்களுக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 136-லிருந்து தொடங்குகிறது.


ஏர் ஆசியா x மலேசியா (D7) அடையாளம் கொண்ட தோக்கியோ,சியோல்,தைப்பே,சொங்கிங், பெய்ஜிங்,அல்மாட்டி,புது டில்லி, சிட்னி உட்பட மேலும் பல நகர்களுக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 295-லிருந்து தொடங்குகிறது.
இப்பொழுது முதல் 27 ஏப்ரல் 2025 வரை இந்த தள்ளுபடி கட்டண டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.


இதன் பயண காலம் 28 ஏப்ரல் முதல் 30 நவம்பர் 2025 என்பது குறிப்பிடத்தக்கது.
டார்வின் நகருக்கான பயண காலம் 27 ஜூன் முதல் அக்டோபர் 6 2025 வரை.
இருக்கை தேர்வுக்கு 25 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.
உங்களின் அடுத்த பயணத்திற்கு AirAsia MOVE அல்லது airasia.com இணையத்தில் வலம் வரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular