Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஆயர் குனிங் இடை தேர்தலில் பாஸ் ஆதரவு பேரவை தீவிர பிரச்சாரம்!

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஆயர் குனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் ஆதரவு பேரவை முழுமூச்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தொகுதியில் வாழும் இந்திய வாக்காளர்கள் பிரச்சனைகளை தாங்கள் கேட்டு அறிந்து வருவதாக பாஸ் ஆதரவு பேரவையின் திரெங்கானு மாநில தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
பாஸ் ஆதரவு பேரவையின் பங்கு என்ன என்பது குறித்து இங்குள்ள இந்திய வாக்காளர்களுக்கு விளக்கம் தரப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
திரெங்கானுவில் பாஸ் தலைமையிலான ஆட்சியில் அனைத்து இனத்தவருக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு வருவதை இங்குள்ள இந்திய வாக்காளர்களுக்கு தாங்கள் விளக்கம் தந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.


பீடோரில் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் முன்னாள் தலைவர் விஸ்வநாதன் மற்றும் மளிகை கடையை நடத்தி வரும் கலைச்செல்வன் ஆகியோரை சந்தித்து பல விளக்கங்களை தாம் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் ஆயர் குனிங் தொகுதியைச் சார்ந்த 80 கொண்ட பேராளர்கள் குழு திரெங்கானு மாநிலத்திற்கு வருகை புரியும்படி தாம் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஆயர் குனிங் சட்டமன்ற இடைத்தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்னும் அடையாளம் காணப்படாத வாக்காளர்களை தாங்கள் சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் பங்காளி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக பாஸ்ட் கட்சியின் உஸ்தாஸ் முஹாய்மின் போட்டியிடுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular