Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஆயர் குனிங் இடை தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம்!

தாப்பா ஏப் 22
விரைவில் நடைபெறவிருக்கும் ஆயர் குனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் உஸ்தாஸ் முஹாய்மினுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர்கள் குறிப்பாக இந்திய வாக்காளர்களை கவர முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
திரெங்கானு பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார்.
இந்திய சமூகத்தினர் எதிர் நோக்கம் கல்வி,பொருளாதாரம் மற்றும் வீட்டுடைமை போன்ற விவகாரங்கள் குறித்து இந்த தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்களிடம் தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டாக்டர் பாலச்சந்திரன் கூறினார்.
தாப்பா மற்றும் பீடோர் வட்டாரத்தில் உள்ள இந்திய வாக்காளர்கள் தாம் உரையாடி அவர்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளை கேட்டு அறிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.


இங்கு சங்காட் பெத்தாய் பொது வீடமைப்பு பகுதியில் வசிக்கும் 22 இந்திய குடும்பங்களுடன் சந்திப்பு நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி இவர்களை தாம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
தங்களின் வரும் கால நலன்களை கருத்தில் கொண்டு பெரிக்கத்தான் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் படி தாம் கேட்டுக் கொண்டதாக அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular