
சிரம்பான் ஏப் 22
இந்தியா மற்றும் மலேசியா மாணவர்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்ற கலந்துரையாடல் 2025 வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த சுற்றுலா மற்றும் கருத்து பரிமாற்ற கலந்துரையாடல் நிகழ்வில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சுற்றுலா,கலை மற்றும் கலாச்சார ஆட்சி குழு உறுப்பினர் நிக்கோல் டான் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
மலேசியா மற்றும் இந்தியா மாணவர்களுக்கிடையே இரு தரப்பு உறவு மற்றும் மாணவர் தலைமைத்துவம் குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக பேசப்பட்டது..
இந்த கலந்துரையாடலில் தமிழகம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் உள்ள பல்லின மக்களின் கலை மற்றும் கலாச்சாரங்களை இந்த மாணவர்கள் விரிவாக தெரிந்து கொண்டனர்.

இந்தியாவைச் சேர்ந்த 51 மாணவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
மேலும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நடனங்களை இந்த மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.
மலேசியாவின் கலாச்சார பண்புகளை தெரிந்து கொள்வதில் இந்த மாணவர்கள் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக குணா கூறினார்.
இதுபோன்ற கலந்துரையாடல் இரு நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது போன்ற கலந்துரையாடல் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என அவர் சொன்னார்.

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வரும் என குணா நம்பிக்கை தெரிவித்தார்.


