Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய இணை அமைச்சருடன் குலா சந்திப்பு!

இந்தியாவின் ஜவுளி மற்றும் வெளி விவகாரங்களுக்கான இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டாவுடன் பிரதமர் இலாகாவின் (சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் சந்திப்பு நடத்தினார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக பேசப்பட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலா கூறினார்.
வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியாவிற்கு செல்லும் மலேசிய வர்த்தகர்களுக்கு விசா விலக்கு குறித்தும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மலேசிய ஜவுளிகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அவர் சொன்னார்.


செயற்கை நுண்ணறிவு,இலக்கவியல் உட்பட குறிப்பிட்டு சில துறைகளில் மலேசியர்கள் பயிற்சி பெற கூடுதல் 200 இடங்கள் ஒதுக்கப்பட்டதிற்காக அமைச்சர் பபித்ராவிற்கு தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார்.
இந்த சந்திப்பில் இந்தியா, பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகம் குறித்து விரிவாக பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பல்கலைக்கழகத்தில் வரலாற்றுக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, பௌத்த மத கல்வி, இந்து கல்வி, அனைத்துலக உறவுகள் உட்பட பல்வேறு துறைகளில் போதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஆகையால் இந்த பல்கலைக்கழகத்தில் மலேசிய மாணவர்கள் மேற்க கல்வியை தொடர வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular