
கோலாலம்பூர் ஏப் 18
பிகேஆர் மகளிர் அணி உச்ச மன்ற உறுப்பினர் கேரன் கஸ்தூரி அக்கட்சியின் செப்புத்தே தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் பதவிக்காக தான் முன்வரவில்லை என அவர் கூறினார்.
செப்புத்தே தொகுதியில் உள்ள மக்களின் குரலை ஓங்க செய்யவே இப்பதவிக்கு தாம் போட்டியிடுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஒரு கணக்காய்வளராக 10 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்த தமது இந்த அனுபவம், கட்சியில் வெளிப்படை தன்மையை வெளிப்படுத்த உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பதவிக்கு தாம் தேர்வு செய்யப்பட்டால், தொகுதி நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றவர் அவர்.
சமூக நலன், கல்வி கல்வி மற்றும் மகளிர் பாதுகாப்பு போன்ற விவகாரங்களுக்கு தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சரின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரியாக பதவி வகித்த காலகட்டத்தில் தேசிய ஒற்றுமை கொள்கை அமலாக்கும் குறித்து போதுமான அனுபவங்களை தாம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
செப்புத்தே தொகுதியை தலைமை ஏற்க தமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் கொள்கைகளை அமலாக்கம் செய்வதில், முழுமையான ஒத்துழைப்பை தாம் வழங்கப் போவதாக அவர் உறுதி அளித்தார்.
ஆகையால் நாளை நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில், தமது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் படி இத்தொகுதி உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.


