Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பிகேஆர் தொகுதி தலைவர் பதவிக்கு சரஸ்வதி கந்தசாமி போட்டி!

நாளை ஏப் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் புக்கிட் பிந்தாங் தொகுதி தலைவர் பதவிக்கு தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி போட்டியிடுகிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக சமூக நீதி மற்றும் மக்களின் உரிமைக்காக போராடிவரும் தாம் புக்கிட் பிந்தாங் தொகுதியை வலுப்படுத்த இந்த களத்தில் இறங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 26 ஆண்டுகளாக புக்கிட் பிந்தாங் மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தி இங்குள்ள மக்களின் உரிமைக்காக தாம் போராடி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தத் தொகுதியில் உள்ள மக்களின் நாடித் துடிப்பு மற்றும் தேவைகளை தாம் நன்கு அறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ‘ஒரு துணையமைச்சர் என்ற நிலையில் இந்தத் தொகுதியில் உள்ள மக்களின் தேவைகளை நன்கு அறிந்துள்ளேன். தொடர்ந்து அவற்றிற்கான தீர்வுகளை கண்டு வருகிறேன்’ என்றார் அவர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் திட்டங்களில் இந்த தொகுதி மக்கள் பயனடைய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
‘இந்த தொகுதியில் தான் ஒரு துணையமைச்சர் என்ற நிலையில் எனது மக்கள் சேவை மையம் உள்ளது. நீங்கள் எதிர் நோக்கம் பிரச்சனைகளை என்னிடம் நேரில் கொண்டு வரலாம்’ என்றார் அவர்.
புக்கிட் பிந்தாங் தொகுதியில் உள்ள மக்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகளை மக்களவை மற்றும் மேலவை வரை கொண்டு செல்ல தாம் தயாரான அவர் உறுதி அளித்தார். நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த கட்சித் தேர்தலில் புக்கிட் பிந்தாங் தொகுதியில் எனது வெற்றிக்கு உங்களின் ஆதரவு எனக்கு தேவை. ‘எனது இந்த வெற்றி உங்களின் வெற்றி என்பதை மறந்து விடாதீர்கள்’ என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular