
பிறை இல்லாத தேசியக் கொடி விவகாரத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை கூறினார்.
தேசியக் கொடி என்பது நாட்டின் இறையாண்மையின் சின்னம். அதை கேலி செய்யக்கூடாது.
மேலும் கொடி என்பது ஒரு நாட்டின் அடையாளம். அது வெறும் வண்ணமயமான வடிவிலான துணி மட்டுமல்ல.
அது போராட்டம், வரலாறு, சுதந்திரத்தின் அர்த்தம். மக்களின் உணர்வைக் குறிக்கிறது.
ஒரு மக்களாக பல்லின சமூகத்தினரிடையே பெருமையுடனும் தேசபக்தியுடனும் தேசியக் கொடியை பறக்க விடுகின்றனர்.
உள்ளூர் சீன மொழி செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தேசியக் கொடி படத்தைப் பிறை நிலவு இல்லாமல் காட்சிப்படுத்தியதன் தவறு மக்களின் உணர்திறனைத் தூண்டக்கூடும்.
மேலும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மாட்சிமை தங்கிய மன்னர் முகநூல் பதிவில் இன்று கூறினார்.


