Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ராக்ஸ்டார் மீடீயா குளோபல் ஏற்பாட்டில் வாங்க பழகலாம் 2.0

ராக்ஸ்டார் மீடீயா குளோபல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாங்க பழகலாம் 2.0 நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
கலைஞர்கள் சங்கமிக்கும் இந்த நிகழ்ச்சி எதிர்வரும் 19 ஏப்ரல் 2025 சனிக்கிழமை ஜொகூர் பாரு, 48 ஜாலான் இந்திரா முத்ரா வில் உள்ள பாரத் இந்தியன் குசின் உணவகத்தில் நடைபெறவிருப்பதாக ராக்ஸ்டார் மீடீயா குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் எம்.ராகவி பவனேஸ்வரி கூறினார்.
இந்தியன் ஹாய் டீ பாணியில் மாலை 3.30 முதல் 6.30 வரை இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றார் அவர்.
இந்த இசை நிகழ்ச்சியில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்திய கலைஞர்கள் கலந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இந்த இசை நிகழ்ச்சி இந்நாடுகளைச் சேர்ந்த நமது இந்திய கலைஞர்கள் பாடல்கள், ஆடல்கள் படைத்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆண், பெண் மாடலிங் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் RagsStar Media Management
0109181891
எண்ணில் தொடர்பு கொண்டு முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular