Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோலாலம்பூர்-டிலி நகருக்கு பாத்திக் ஏர் நேரடி விமான சேவை!

கோலாலம்பூரிலிருந்து திமோர்-லெஸ்டேவின் தலைநகரான டிலி நகருக்கு பாத்திக் ஏர் நேரடி விமான சேவையை தொடங்கவிருக்கிறது.
இந்த நகருக்கு விமான சேவையை மேற்கொள்ளும் முதலாவது மலேசிய விமான நிறுவனம் பாத்திக் ஏர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரிந்தியத்தில் புதிய பயடண வாய்ப்புகளை விரிவுபடுத்த பாத்திக் ஏரின் இலக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 6 ஜூன் 2025-ல் தொடங்கவிருக்கிறது. முதல் கட்டமாக வாரத்திற்கு இரண்டு விமான சேவைகளை இந்நகருக்கு பாத்திக் ஏர் மேற்கொள்ளவிருக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவின் மிக புதிரான நகரங்களில் ஒன்றான டிலி பயணிகளை அதிகம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த புதிய விமான சேவை மலேசியா மற்றும் திமோர்-லெஸ்டேவிற்கு தூதரக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே டிலி நகருக்கு இந்த விமான பயண விஸ்தரிப்பு, இப்ராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட முன்னெடுப்பு என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
மேலும் மலேசியா மற்றும் திமோர் ஆகிய நாடுகளுக்கிடையே சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளையில் தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாவின் வான் போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் என்றார் அவர்.
இந்த புதிய விமான சேவையின் மூலம் பயணிகளுக்கு அலைச்சலற்ற மற்றும் நேரடி விமான சேவையை பாத்திக் ஏர் வழங்குவதாக அவர் சொன்னார்.


கோலாலம்பூரிலிருந்து நான்கு மணி நேரம் 15 நிமிடங்களில் பயணிகள் டிலி நகருக்கு சென்றடையலாம் என அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியா மற்றும் திமோர்-லெஸ்டேவை இந்த புதிய விமான சேவை எளிதில் இணைக்கிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கேஎல்ஐஏ1) ஒரு முக்கிய இடைநிற்றல் மையம் என்ற நிலையை இந்த புதிய விமான சேவை மேலும் வலுப்படுத்தும் என அவர் சொன்னார்.
இப்புதிய விமான சேவையின் மூலம் வர்த்தக ஒ ஒத்துழைப்பு, கல்வி பரிமாற்றம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு வலுப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
பயணிகளுக்கு தடையற்ற மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
திமோர்-லெஸ்டேவின் வளமான பாரம்பரியம் மற்றும் அற்புதமான நிலப்பரப்பை மலேசியர்கள் கண்டு ரசிக்க இது ஒரு அற்புதமான வாய்ப்பு என அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் தீமோர்-லெஸ்டே மக்கள் தென்கிழக்காசியாவின் இதர நகர்களை சுற்றி பார்க்க இந்த விமான சேவை உதவும் என அவர் சொன்னார்.
காரணம் திமோர்-லெஸ்டேவில் தற்போது குறிப்பிட்ட சில விமான நிறுவனங்களை செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கோலாலம்பூரின் வழி 20 நாடுகளின் 60-க்கும் மேற்பட்ட நகர்களுக்கு திமோர் லெஸ்டே மக்கள் பயணிக்கலாம்.
ஆசியான் நாடுகள், சீனா, வட ஆசியா நாடுகள், இந்திய துணைக் கண்டம், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா நாடுகளுக்கு இந்த புதிய விமான சேவை எளிதில் இணைக்கும் என்பதால், திமோர்-லெஸ்டே மக்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என அவர் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவின் கண்டுபிடிக்கப்படாது முத்து என கருதப்படும் டிலி நகரம், பல சிறப்பு அம்சங்களை கொண்டது.
இயற்கை அழகைக் கொண்ட கடற்கரைகள், உலக தர நீர் மூழ்கும் விளையாட்டுகள் சுற்றுப்பயணிகளை அதிகம் கவரும்.
டிலி நகருக்கு பாத்திக் ஏரின் இந்த நேரடி விமான சேவை வர்த்தக பயணிகள் மற்றும் பாரம்பரிய அம்சங்களை விரும்பும் பயணிகளை அதிம் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த புதிய விமான சேவைக்கு பாத்திக் ஏர் B737 ரக விமானத்தை பயன்படுத்தும்.
இந்த புதிய விமான சேவையில் பயணிகளுக்கு போதுமான சலுகைகள் வழங்கப்படும்.
இப்பொழுது முதல் பயணிகள் www.batikair.com இணையத்தில் அல்லது Batik Air mobile app செயலியின் வழி டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular