
சுபாங் ஏப் 14
தனது பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளுக்கு சொகுசான சேவையை வழங்க லிப்மோட்டோர் நிறுவனத்துடன் பாத்திக் ஏர் கைகோர்த்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கேஎல்ஐ1-ல் உள்ள துணை கட்டிடம் மற்றும் பிரதான முனைய கட்டிடத்திற்கு இடையே பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளை கொண்டு செல்ல லிப்மோட்டோரின் நியூ எனர்ஜி வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
ஸ்டேலான்டிஸ் மலேசியா அறிமுகப்படுத்தியுள்ள முதல் நியூ எனர்ஜி வாகனங்கள் இவை ஆகும்.
அனைத்து வசதிகளையும் கொண்ட லிப்மோட்டோர் C10 வாகனங்களில் பாத்திக் ஏரின் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகள் துணை கட்டிடத்திலிருந்து முதன்மை முனைய கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்படுவர்.
இந்தப் பிரத்தியோக தனியார் முனைய மாற்ற சேவை பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.
பயணிகள் நன்றாக அமர்ந்து செல்ல அனைத்து வசதிகளும் இந்த வாகனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயணப்பெட்டிகளை எளிதாக வைத்துக் கொள்ளவும் மற்றும் பெரிய பொருட்களை வைக்கவும் இந்த வாகனங்களில் வசதிகள் உள்ளன.
பாத்திக் ஏர் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளுக்கு பிரத்யோகமாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான முனைய கட்டிடத்தின் Gate G1 மற்றும் துணை கட்டிடத்தில் Gate C1 இடையே இந்த பயணிகள் வசதியாக கொண்டு செல்லப்படுவர்.
இந்த சேவைக்காக 5 லிப்மோட்டோர் C10 வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
ஏரோடிரெய்ன் தற்காலிக ரத்து செய்யப்பட்ட போது ஏர்போர்ட் மலேசியா வழங்கி வரும் பாஸ் மாற்ற சேவையும் தொடரும்.
இதனிடையே இந்த கூட்டு ஒப்பந்தம் பாத்திக் ஏர் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளுக்கு வழங்கும் புதுமையான மற்றும் நிலையான சேவை என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
பாத்திக் ஏர் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகள் இந்த சொகுசான பயணம் சேவைக்கு தகுதியானவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

பாத்திக் ஏர் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகள் விமான நிலையம் வந்தடைந்ததும், அவர்கள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொன்றும் புதுமையான அனுபவத்தை தர வேண்டும்.
தாங்கள் செல்லும் இடம் தங்களுக்காக காத்திருக்கிறது என்ற உணர்வு இவர்களுக்கு ஏற்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இவர்கள் விமான நிலையம் வந்தடைந்ததும், ஒரு சொகுசான உணர்வு இவர்களுக்கு ஏற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே பிரிமீய பயணத்திற்காக லிப்மோட்டோர் C10 வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ASEAN,Stellantis நிர்வாக இயக்குனர் ஐசெக் இயோ கூறினார்.
புதுமையான மற்றும் நிலையான வாகன சேவையை வழங்குவதில் Stellantis நிறுவனம் எப்பொழுதுமே முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தனது பயணிகளுக்கு தடையற்ற மற்றும் சொகுசான பயணத்தை வழங்குவதில் தங்களின் நிறுவனம் முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கூடுதல் தகவல் மற்றும் உங்களின் அடுத்த கட்ட பயணத்திற்கு பாத்திக் ஏரின் www.batikair.com அக பக்கத்திற்கு வளம் வரலாம்.


