
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் (LPHS) வழியாக 100 வீடுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த வீடுகள், Skim SMART Sewa Selangor எனும் சிறப்பு வாடகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.
📌 மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில்:
“மத்திய அரசின் நன்கொடையுடன் இணைந்து, அந்த வீடுகளுக்கான பகுதிச் செலவை சிலாங்கூர் அரசு ஏற்கும். ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.”
🗓️ மேலும் அவர் கூறியதாவது:
“இன்னும் 2 வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களை புதிய வீடுகளில் தங்கவைக்கலாம்.”
🏥 தற்போது இயங்கும் PPS தற்காலிக நிவாரண மையங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்.
📸 இன்று காலை PPS மையங்களுக்கு நேரில் சென்ற மந்திரி பெசார், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியபோது, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அவருடன் இருந்தார்.
🔹 மக்களுக்கு பாதுகாப்பும், உறுதியும் அளிக்கின்ற சிலாங்கூர் அரசின் முயற்சி, சமூக நலம் குறித்த அவர்களது அர்ப்பணிப்பை வெளிக்காட்டுகிறது.


