
கோலாலம்பூர் மார்ச் 31
உலக அமைதியை ஊக்குவிக்க அரசு சார்பற்ற அமைப்பான HWPL மலேசியா முக்கிய பங்காற்றி வருவதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
பல இன மக்கள் மற்றும் மாதங்களுக்கு இடையே ஒற்றுமை அடித்தளமாக இருந்தால் மட்டுமே உலகெங்கும் அமைதி நிலவும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் இங்கு HWPL மலேசியா ஏற்பாடு செய்த 9 ஆம் ஆண்டு அமைதி மற்றும் போர் கைவிடுதல் பிரகடன நினைவேந்தல்(DPCW) கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
ஒரு மிக அமைதியான ஒருங்கிணைந்த உலகை உருவாக்கும் ஒரே இலக்கை கொண்ட தனி நபர்களை ஒன்று சேர்ப்பதில் ஒரு அரசு சார்பற்ற அமைப்பான HWPL மலேசியா வெற்றி கண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சமூகங்களுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலை நிறுத்துவதில் இந்த அரசு சார்பற்ற அமைப்பு வரும் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் பல இன மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு நிங் போங் தலைமையிலான HWPL மலேசியா பல திட்டங்களை வகுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

HWPL மலேசியாவின் திட்டங்களுக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் உறுதி அளித்தார்.
ஒற்றுமையின்றி அமைதி நிலவி விடாது. மலேசியாவில் பல்லின, பல கலாச்சாரங்களை கொண்ட சமூகங்களுக்கிடையே ஒற்றுமை வலுபெற வேண்டும்.
இந்த சமூகங்களுக்கு இடையே அமைதியை நிலை நிறுத்த,HWPL மலேசியா போன்ற அரசு சார்பற்ற அமைப்புக்களின் பங்களிப்பு மிக அவசியம் என அவர் சுட்டிக் காட்டினார்.
நமது சமூகங்களில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த இந்த அமைப்புகள் அமைதி கருத்தரங்குகள், தன்னார்வ திட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவது வரவேற்கத்தக்க ஒன்று என்றார் அவர்.
ஒற்றுமைக்கு பாலம் அமைப்போம் என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இன்றைய நிகழ்ச்சி, ஒருமைப்பாட்டு அமைச்சின் இலக்கிற்கு ஏற்புடையதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஒற்றுமை ஒரு இலக்கு மட்டுமல்ல. அது நமது சமுதாயத்தின் அடித்தளமாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.

ஒற்றுமையின் மகிமையை இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரதியையும் உணர வேண்டும் என செனட்டர் சரஸ்வதி வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைதி மற்றும் ஒற்றுமையின் அவசியம் குறித்து My culture அறவாரியத்தின் தலைவர் டாக்டர் கந்தசாமி, திரெங்கானு மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன்,T-Ratana Lumbini Garden அமைப்பின் தலைவர் Bhante Hemaloka Thera, Tailor கல்லூரியில் மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் ஜெனித்தா கணபதி மற்றும் பிரம்ம குமாரிகள் அறக்கட்டளையின் தலைவர் பிகே பூய் ஆகியோர் தங்களின் உரைகளில் விரிவாக விளக்கம் தந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் HWPL விளம்பர தூதர் நவநீதகிருஷ்ணன் ரத்தினம், அனைத்துலக ஒன்றிய கலாம் அறக்கட்டளை (மலேசியா) இயக்கத்தின் இயக்குனரும், ஜெயம் நம் நாடு கோலாலம்பூர் & சிலாங்கூர் சமூகநல இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் குமரேந்திரன் பாலகிருஷ்ணன், பாஸ்டர் ஜோன்சன் ஜேப், புக்கிட் செமுஜா சட்டமன்ற உறுப்பினர் ஜோன் இலூஸ் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


