Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜொகூர் மஇகா உதவிக்கரம்

ஜொகூர் பாரு மார்ச் 22
அண்மையில் ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜொகூர் மஇகா தேவையான உதவிகளை செய்தது.
ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் மாநில மஇகா தலைவருமான ரவீன் குமார் தலைமையில் உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டது.


ஜொகூர் மஇகா தொகுதி மற்றும் கிளை தலைவர்கள் வெள்ள நிவாரண நிலையங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருவதாக ரவீன் குமார் கூறினார்.


ஜொகூர் மக்களுடன் ஒன்றிணைந்து இந்த சவால்களை தாங்கள் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில மஇகா தொடர்ந்து இதுபோன்று உதவிகளை வழங்கி வரும் என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular