Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

விழா காலத்தில் சிக்கல் இல்லா பயணத்திற்கு பயண வழிகாட்டிகளை பின்பற்ற ஏர் ஆசியா ஆலோசனை!

செப்பாங் மார்ச் 21
எதிர்வரும் ஹாரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிக்கல் இல்லை பயணத்திற்கு பயண வழிகாட்டிகளை பின்பற்றும்படி அனைத்து பயணிகளுக்கும் ஏர் ஆசியா ஆலோசனை கூறியுள்ளது.
குறிப்பாக 28 மார்ச் முதல் 5 ஏப்ரல் 2025 வரை இந்த பயனை வழிகாட்டிகளை பின்பற்றும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளனர்.

  • AirAsia MOVE செயலியின் வழி சுய நுழைவு பதிவை பயணிகள் செய்து கொள்ளலாம். புறப்படும் நேரத்திற்கு 14 நாட்களுக்கு முன்பாக மற்றும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த பதிவை பயணிகளும் செய்து கொள்ளலாம்.
    28 மார்ச் மற்றும் 5 ஏப்ரல் 2025 இடையிடையே தங்களுடைய ஹாரி ராயா விமான பயணங்களுக்கு சுய நுழைவு பதிவின் வழி மின்னியல் பயண அட்டைகளை இப்பொழுதே பெற்றுக் கொள்ளலாம்.
  • பயணிகள் உள்நாட்டு விமான பயணத்திற்கு குறைந்தது 2 மணி நேரம் முன்பாக மற்றும் அனைத்துலக விமான பயணத்திற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையம் வந்தடைந்திட வேண்டும்.
    உச்ச பயணம் காலகட்டத்தின் போது பயண நடைமுறைகளுக்கு இது மிக அவசியமாகும்.
  • AirAsia MOVE செயலியில் மின்னியல் பயண அட்டையை (e-Boarding Pass) பயன்படுத்துமாறு பயணிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
    பயண அட்டையை அச்சிடும் தாமதத்தை தவிர்க்க இது எளிதான வழியாகும். மலேசியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் e-Boarding Pass ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஏர் ஆசியா விமான சேவையை மேற்கொண்டு வரும் இதர உலக நாடுகளின் விமான நிலையங்களிலும் இந்த e-Boarding Pass ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  • பயணிகள் விமானத்திற்குள் கொண்டு செல்லும் பயண பெட்டிகளின் அளவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் ஏர் ஆசியா இணையதளத்தின் மூலம் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம். தனது அனைத்து பயணிகளுக்கும் தனது ஹாரி ராயா கொண்டாட்ட வாழ்த்துக்கள் ஏர் ஆசியா தெரிவித்துக் கொள்கிறது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular