
ஸ்கூடாய் மார்ச் 21
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்கூடாய் வட்டாரத்தில் நிலவிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி நேரில் சென்று கண்டார்.
இதுவரை ஜொகூரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 5,092 பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 79 வெள்ள நிவாரண நிலையங்களில் இவர்கள் தற்காலிகமாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
MBIP ஸ்கூடாய் மண்டபத்தில் 61 குடும்பங்களைச் சார்ந்த 169 பேர் வைக்கப்பட்டுள்ளனர் .
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என ஓன் ஹபிஸ் கூறினார்.
மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த அனைத்து இலாக்காக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் துணிமணிகள் மற்றும் இதர வசதிகள் வழங்கப்படும் என அவர் சொன்னார்.


