
2025 துங்கு அப்துல் ரஹ்மான் அறக்கட்டளையின் சட்ட திருத்த மசோதாவை இரண்டாம் வாசிப்பிற்கு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மேலவையில் சமர்ப்பித்தார்.
1966 ஆம் ஆண்டு துங்கு அப்துல் ரஹ்மான் அறக்கட்டளை குழுமத்தின் சட்டத்தில் திருத்தம் செய்ய இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சருமான அவர் சொன்னார்.
தேசிய சட்டத்துறை இலாகா தயார் செய்த இந்த 2025 துங்கு அப்துல் ரஹ்மான் அறக்கட்டளை குழுமத்தின் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 24 ஜனவரி 2025-ல் அமைச்சரவை நிறைவேற்றியதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த மசோதாவில் தேவைக்கு ஏற்ப பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமான பின்னணியை கொண்ட தனி நபர்கள் மேல் கல்வியை தொடர இந்த சட்ட திருத்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ருக்கூன் நெகாரா கோட்பாடுகளை உறுதியுடன் பின்பற்றவும் ஒற்றுமையை வலுப்பெறச் செய்யவும் இந்த சட்ட திருத்தத்தில் வலியுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
துங்கு அப்துல் ரஹ்மான் அறக்கட்டளை குழுமம் மக்களுக்கு உதவும் இலக்கை அதிகரிக்கச் செய்ய இந்த சட்ட திருத்தம் உதவும் என்றார் அவர்.
குறைந்த வருமானம் பெறும் இளைஞர்களுக்கு உதவிடவும் உயர்கல்வியை தொடரவும் இந்த


