
சுபாங் மார்ச் 18
பவர் பேங்குகளை பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்பு கவலைகளை தொடர்ந்து,பாத்திக் ஏர் இப்போது அதிகபட்சமாக 2 பவர் பேங்க் யூனிட்டுகளை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கிறது.
சுமுகமான பயண அனுபவத்தை உறுதி செய்யவும் அதே வேளையில் மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களை பேணுவதில் உறுதியாக இருப்பதாகவும் பாத்திக் ஏர் அறிக்கை ஒன்றில் கூறியது.
பயணிகள் அதிகபட்சம் இரண்டு பவர் பேங்க் யூனிட்டுகளை கொண்டு செல்லும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
அவை எப்பொழுதும் தனிநபரிடம்(ஆன்-பெர்சன்) வைத்திருக்க வேண்டும்.கேபின் பேக்கேஜில்(கேரி-பேக்கேஜில்) வைக்க முடியாது.
அனைத்து பாத்திக் ஏர் விமானங்களிலும் செக்-இன் பேக்கேஜிகளில் பவர் பேங்க் யூனிட்டுகளை
வைக்க தடை செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கை கூறியது. இந்த புதிய கொள்கைக்கு இணங்க அனைத்து பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம் என பாத்திக் ஏர் கேட்டுக்கொண்டது.
இது விமானத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறையாகும்.
மேலும் அதிக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கேபினில் பவர் பேங்க் யூனிட்டுகளை
பயன்படுத்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ மெக்னடிக் சார்ஜிங் அம்சம் கொண்ட பவர் பேங்க் யூனிட்டுகளை கொண்டு செல்லும்போது பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் அது கூடுதல் அபாயங்களை ஏற்படுத்தும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அனைத்துலக விமான போக்குவரத்து சங்கத்தின் அபாயகரமான பொருட்கள் விதிமுறையின் படி விமானத்தில் கொண்டு செல்லப்படும் ஆற்றல் வங்கிகள் 100-வாட் மணி நேரம் அல்லது 20,000 மில்லியம்- பியர் ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது.
பாதுகாப்பு நினைவூட்டல் செக்-இன் கவுண்டரில் தெளிவாக காட்டப்படும். மேலும் இது விமானத்திற்கு முந்தைய அறிவிப்புக்கள், விமானத்தில் உள்ள விளக்கங்கள் மூலம் முகமாக செயல்படுவது உறுதி செய்ய வலியுறுத்தப்படும்.
செக்-இன் ஊழியர்கள் விமானம் நல்ல நிலையில் மற்றும் வாட்-ஹவர் வரும்புக்கு இணைவது உறுதி செய்வதற்காக பயணிகள் விமானத்தில் ஏறும் முன் பவர் பேங்க் யூனிட்டுகளை சரி பார்ப்பார்கள் என அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.


